பாரளுமன்ற வீதிகள் மூடப்பட்டன.

பாரளுமன்ற சுற்று வட்ட சகல வீதிகளும் மூடப்பட்டு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளையதினம் காலை 10 மணிக்கு பாரளுமன்றம் கூடவுள்ளது. நாளையதினம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளன.

இந்த சூழ்நிலையிலேயே பாராளுமன்றத்துக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியினை நாளைய தினம் தெரிவு செய்யவுள்ள அதேவேளை நாளை மறு தினம் அவர்களை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தெரிவு முக்கியத்துவம் பெறும் நிலையில் பாராளுமன்றத்துக்குள் உள் நுழைந்து குழப்பங்களை விளைவிக்க கூடுமென சந்தகேகிக்கப்படுவதனாலேயே இந்த அதிகரித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் அவசரகால சட்டம் அமுல் செய்யப்பட்டும் உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திஸ்ஸநாயக்கே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும ஆகியோர் ஏற்கனவே தாம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

நாளையதினம் தெரிவுகள் இடம்பெறும் அதேவேளை, நாளை மறுதினம் வாக்களிப்பை நாட்டு மக்களும், உலக நாடுகளும் மிகுந்த விறுவிறுப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பாரளுமன்ற வீதிகள் மூடப்பட்டன.

Social Share

Leave a Reply