ஜனாதிபதி போட்டியாளர்கள் அறிவிப்பு.

ஜனாதிபதி போட்டியளர்களுக்கான பெயர்கள் இன்று(19.07) காலை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, பாராளுமன்றம் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளையதினம் காலை 10 மணிக்கு பாரளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்யும் வாக்களிப்பு இடம்பெறுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தெரிவிற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அலகபெரும, அனுரகுமார திஸாநாயக்கே ஆகியோரது பெயர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனை தொடந்த்து ஆளும்கட்சி பிரதம கொரோடா தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க நாளை காலை 10 மணிக்கு பாரளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி போட்டியாளர்கள் அறிவிப்பு.

Social Share

Leave a Reply