(ச.விமல் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று மதிய போசனத்துக்காக போட்டி நிறுத்தப்படும் போடு பாகிஸ்தான் அணி நல்ல ஆரம்பத்தினை பெற்றுள்ளது. 342 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடும் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி ஓட்டங்களை நிதானமாக பெற்றுள்ளது.
நாளைய தினமும் போட்டியில் காணப்படுவதனால் மிக மெதுவாக துடுப்பாடுவது பற்றிய அழுத்தம் அவர்களுக்கு இல்லை.
இன்றைய நான்காம் நாள் போட்டி ஆரம்பித்து சொற்ப வேளையிலேயே இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவடைந்தது. இலங்கை அணியின் இறுதி விக்கட் வீழ்த்தப்பட்டது. டினேஷ் சந்திமால் 94 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமால் திரும்பினார்.
இலங்கை அணி 337 ஓட்டங்களோடு ஆட்டமிழந்ததனை தொடர்ந்து, 342 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நான்காம் இன்னிங்சில் துடுப்பாடுவது மிகவும் கடினம். இலங்கை அணி 268 ஓட்டங்களை துரதியடித்தமையே சாதனையாக காணப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் பலமானது. குறைத்து மத்திப்பிட முடியாது. போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். தற்போது செல்வது போன்று சென்றால் இலங்கை அணி சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
இலங்கையின் இரண்டாம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பெரியளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டனர். தனது நான்காவது போட்டியில் முதலாவது 5 விக்க்கெட் பெறுதியினை பெற்றுள்ளார்.