போராட்டகாரர்கள் மீதான நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

அமைதியான, வன்முறையற்ற போராட்டங்களை நடாத்த முடியுமெனவும், அதற்கான உரிமையுண்டு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற இராஜதந்திரிகளுடனான கூட்டத்தில் இதனை ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி மாளிகையில், சட்டவிரோதமாக கூடியிருந்த போராட்டக்காரர்களை அகற்றியமை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் முகாமாக நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த விடயங்களை ஜனாதிபதி ரணில்  வெளியிட்டுள்ளார்.

 

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை 21,   மற்றும் இலங்கை அரசியலமைப்பு 14 (1)(b) ஆகியவற்றின் அடிப்படையில் அமைதியான போராட்டங்களுக்கு அனுமதியுண்டு. அதற்காக  விகாரமகாதேவி திறந்த வெளியரங்கு, புதிய நகர மண்டபம், ஹைட்பார்க் கோர்னர், கம்பல் பார்க் ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விளக்கமளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்கா சுதந்திர சிவில்  தொழிற்சங்கம், அரச நிறுவனங்களை தடை செய்வது, இடையூறு மேற்கொள்வது போன்ற விடயங்களை போராட்ட காரர்கள் செய்ய முடியாதென கூறியுள்ளதாக சுட்டிக்காட்டி; தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான நியாயப்பாட்டை ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

 

பல தடவைகள் போராட்ட காரர்களை, அந்த இடத்திலிருந்து செல்லுமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரியதாகவும், ஆனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை எனவும், இராணுவத்தினர் போராட்டகாரர்களை அகற்றியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பட்டுள்ளதாகவும், உரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் போராட்ட காரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தியதாகவும் மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

Social Share

Leave a Reply