அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பில் கடந்த காலங்களில் நடைமுறையில் உள்ள நடைமுறையினை மேலும் ஒரு மாதத்துக்கு நடைமுறைப்படுத்துவதாக பொதுசேவைகள், மாகாணசபைகள், மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
இணைய சேவையூடாக செய்ய முடியாத வேலைகளுக்கான ஊழியர்கள் கடமைக்கு செல்ல வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றையவர்கள் வீட்டிலிருந்த்து கடமையாற்றும் நடைமுறை மூலம் வேலை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தொடரும் எரிபொருள் சிக்கல் நிலையினால் போக்குவரத்து சிக்கல்கள் காணப்படுவதனால், இந்த நடவடிக்கை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றைக்கையின் சாதமாக பாவித்து வேலைக்கு செல்லாமல் துஸ்பிரயோகம் செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கான வேலைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்தும் கடமைக்கு செல்லவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.