வவுனியா ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் நேற்று காலை கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா கல்மடு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
அந்த பகுதியினை சேர்ந்த பெண் ஒருவர் தமது வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
