ஜனாதிபதி மாளிகையினுள் கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி புகுந்து போராட்டகாரர்கள் மக்கள் என பலர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஜனாதிபதி மாளிகையினுள் தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என குற்றம் சுமத்தி பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தொடர் கைதுகளின் வரிசையில் நேற்று ஜனாதிபதியின் கதிரையினை கைப்பற்றிய நபர் குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெரணியகலை பகுதியில் வைத்து 28 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை, சமன்புரகம பகுதியினை சேர்ந்த நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
