ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதேவேளை, தங்களது ஆட்சியில் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு தொடருமென தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தங்களது எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்களும் தெரிவிப்பதோடு, தங்களது ஆட்சியில் நாட்டுக்கும், மக்களுக்கும், சந்தோசம் மற்றும் நன்மைகள் கிடைக்கவேண்டுமெனவும் வாழ்த்துவதாக வாழ்த்து செய்தியில் மகாராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.
