கொழும்பு, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் எதிர்வரும் 05 ஆம் திகதி மாலை 05 மணிக்கு முன்னர் அகற்றப்படவேண்டுமென இன்று கொழும்பு கோட்டை பொலிஸார் அறிவிப்பு செய்துள்ளனர்.
காலிமுகத்திடல் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்ற பொலிசார் ஒலிபெருக்கி மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
காலிமுகத்திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டடங்கள் மற்றும் பயிர் செய்யப்பட்டுள்ள இடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குரிய இடமெனவும் மேலும் பொலிசாரின் அறிவிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் இதனை கவனத்திற் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
