இலங்கையில் அண்மையில் நடைபெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு திருடப்பட்ட வாகன இலக்க தகடுகள் பாவிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வாகன இலக்க தகடுகள் திருடப்பட்டால், அல்லது காணாமல் போனால் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடைபெற்றுள்ள அநேகமான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்தவர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முதல் நேற்று வரை 21 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களில் 23 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.