எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தங்கை டுலாஞ்சலி பிரேமதாச இன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு சென்றிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணையினை நிறைவு செய்துகொண்டு திரும்பிய வேளையில் “அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட வேளையில் தான் அந்த பகுதியில் இருந்தமையினால் விசாரணைகளை இலகுபடுத்த தகவல்களை கோரியதாக” டுலாஞ்சலி ஊடங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
ஜூலை மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற கலவரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.