இந்தியா, சிம்பாவே அணிகளுக்கிடையிலான தொடரில் இந்தியா முன்னிலை.

இந்தியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் இன்று (20/08) ஹராரே இல் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய சிம்பாவே அணி 38.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களை பெற்றது. இதில் சீன் வில்லியம்ஸ் 42(42) ஓட்டங்களையும், ரியான் புர்ல் ஆட்டமிழக்காமல் 39(47) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷர்தூல் தாகூர் 3 விக்கெட்களையும், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, பிரசித் கிருஷ்ணா, மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றது. இதில் சஞ்சு சம்சன் ஆட்டமிழக்காமல் 43(39) ஓட்டங்களையும், சுப்மன் கில் 33(34) ஓட்டங்களையும், ஷிகர் தவான் 33(21) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லுகே ஜொங்க்வே 2 விக்கெட்களையும், சிக்கந்தர் ரசா, டனக்கா சிவங்கா, விக்டர் நியௌச்சி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்தியா அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகனாக சஞ்சு சாம்சன் தெரிவு செய்யப்பட்டார்.

நாளை மறுதினம் (22/08) மதியம் 12:45 இற்கு மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டி ஹராரேயில் நடைபெறவுள்ளது.

-வி.பிரவிக்(தரம் 04)

Social Share

Leave a Reply