வவுனியாப் பல்கலைக்கழகத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி பல்கலை கழகத்தின் விளையாட்டு அலகின் ஏற்பாட்டில் வீதியோட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு வவுனியா பூங்கா வீதியிலுள்ள பல்கலைக்கழக அலுவலக முன்றலில் ஆரம்பித்து வவுனியா, பம்பைமடு பல்கலைக்கழகத்தில் இந்த வீதியோட்டம் நிறைவடையவுள்ளது.
இந்த வீதியோட்டத்தில் கழகங்கள், பாடலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என சகலரும் பங்குபற்ற முடியுமென வவுனியாப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வீதியோட்ட நிகழ்வில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் நாளை (24/08/2022 )காலை 8.30 மணி முதல் மருத்துவ பரிசோதனையை வவுனியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியுமெனவும் அதற்காக அனுமதிகள் யாவும் பெறப்பட்டுள்ளன எனவும் ஏற்பாட்டளார்கள் தெரிவித்துள்ளனர்.
தாமதிக்காது விரைவாக மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளும் படியும் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
