பாரளுமன்ற பொது நிதி குழுவின் தலைவராக ஹர்ஷ MP

பாராளுமன்றத்தின் பொது நிதிக்குழுவின் கூட்டம் இன்று(23.08) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றது.

நிலையியற் கட்டளை 121 இன் பிரகாரம், பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்ட தொடரில் பொது நிதிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டின் சட்ட மூலம் 30 திருத்தப்பட்டு அதற்க்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும், அந்நியச் செலவாணி சட்டதின் கீழான விதிமுறைகள், சிறப்பு பொருட்கள் வரி, சுங்க திணைக்களத்தின் விதிமுறைகள் போன்ற திருத்தங்களுக்கு பாராளுமன்ற பொது நிதிக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply