-ஷார்ஜாவிலிருந்து விமல்-
பங்களாதேஷ் அணியினை வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி குழு B இல் இருந்து அடுத்த சுற்றுக்கு தெரிவானது. மக்கள் கூட்டம் நிறைந்த மைதானத்தில் இரு அணிகளுக்கும் ரசிகர்கள் சம அளவில் காணப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று சுப்பர் 04 என அழைக்கப்படும் இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணிக்கான பிரகாசமான வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அடுத்த போட்டியில் பங்களாதேஷ் அணியினை வெற்றி பெற்றால் நேரடியாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகலாம்.
பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தில் ஆரம்பத்தில் சறுக்கியதனால் இந்தப் போட்டியில் தோல்வியினை சந்திக்க நேரிட்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியும் அதிக ஓட்ட எண்ணிக்கையினை பெற முடியாமல் போனது அவர்களுக்கு பின்னடைவு. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைய பங்களாதேஷ் அணி தடுமாறி போனது.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தின் போது தொடர்ச்சியான இடைவேளைகளில் விக்கெட்கள் வீழ்த்தப்பட போட்டி மிகவும் விறுவிறுப்பை தொட்டது. துடுப்பாட்டத்தில் போராடி ஆப்கானிஸ்தான் அணி வெற்றியினை தனதாக்கியது.
இப்ராஹிம் ஷர்தானின் நிதானம் கலந்த அதிரடி துடுப்பாட்டம் ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் கை கொடுத்தது. இறுதியாக வான வேடிக்கை காட்டி அதிரடியாக நஜிபுல்லா ஷர்டான் போட்டியினை நிறைவு செய்தார்.
01 ஆம் திகதி பங்காளதேஷ், இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்றுக் கொள்ளுமணி குழு B இல் இரண்டாமிடத்தை பெற்று சுப்பர் 04 சுற்றுக்கு தெரிவாகும்.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ஹஸ்ரதுல்லா ஷசாய் | L.B.W | முகமட் நபி | 23 | 26 | 3 | 0 |
ரஹ்மானுல்லா குர்பாஸ் | St – முஷ்பிகுர் ரஹீம் | ஷகிப் அல் ஹசன் | 11 | 18 | 1 | 0 |
இப்ராஹிம் சர்டான் | 42 | 41 | 4 | 0 | ||
முகமட் நபி | L.B.W | மொஹமட் சைபுடீன் | 08 | 09 | 1 | 0 |
நஜிபுல்லா சர்டான் | 43 | 17 | 1 | 6 | ||
உதிரிகள் | 04 | |||||
ஓவர் 19 | விக்கெட் 02 | மொத்தம் | 131 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஷகிப் அல் ஹசன் | 04 | 00 | 10 | 01 |
முஸ்டபய்சூர் ரஹ்மான் | 03 | 00 | 30 | 00 |
மெஹேதி ஹசன் | 04 | 00 | 26 | 00 |
டஸ்கின் அஹமட் | 03 | 00 | 22 | 00 |
மொசதாக் ஹொசைன் | 02.3 | 00 | 12 | 01 |
மொஹமட் சைபுடீன் | 02 | 00 | 27 | 01 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
மொஹமட் நைம் | BOWLED | முஜீப் உர் ரஹ்மான் | 06 | 08 | 1 | 0 |
அனாமுல் ஹக் | L.B.W | முஜீப் உர் ரஹ்மான் | 05 | 14 | 0 | 0 |
ஷகிப் அல் ஹசன் | BOWLED | முஜீப் உர் ரஹ்மான் | 11 | 09 | 2 | 0 |
முஷ்பிகுர் ரஹீம் | L.B.W | ரஷீட் கான் | 01 | 04 | 0 | 0 |
அபிஃப் ஹொசைன் | ரஷீட் கான் | 12 | 14 | 0 | 0 | |
மஹமுதுல்லா | ரஷீட் கான் | 25 | 27 | 1 | 0 | |
மொசதீக் ஹொசைன் | 48 | 31 | 04 | 0 | ||
மெஹேதி ஹசன் | Run Out | 14 | 12 | 2 | 0 | |
உதிரிகள் | ||||||
ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 127 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஃபசல் ஹக் ஃபரூக்கி | 04 | 00 | 25 | 00 |
முஜீப் உர் ரஹ்மான் | 04 | 00 | 16 | 03 |
நவீன் உல் ஹக் | 04 | 00 | 31 | 00 |
ரஷீட் கான் | 04 | 00 | 22 | 03 |
முகமட் நபி | 03 | 00 | 23 | 00 |
அஸ்மதுல்லா ஒமர்சாய் | 01 | 00 | 07 | 00 |