எரிபொருள் தேவைகள் மதிப்பாய்வு

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் இன்று மீளாய்வு செய்யப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜேசேகரவின் தலைமையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வர்த்தக மற்றும் நிதி நிர்வாகத்துடன் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தேவைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply