நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய வானிலையானது நாளைய தினமும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது நிலவி வரும் வானிலையானது இன்று இரவு சில பிரதேசங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே நூறில் 60க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதோடு அவற்றில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தை உள்ளடிக்கியுள்ளனர்.

Social Share

Leave a Reply