-டுபாயிலிருந்து விமல்-
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றுப்போட்டி தற்சமயம் ஐக்கிய அரபு இராட்சியம், டுபாய் சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை, தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி அதிரடியான ஆரம்பம் ஒன்றை பெற்றதனால் சிறந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொண்டது. லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா இருவருமே வேகமாக ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். இருப்பினும் மூன்று விக்கெட்கள் தொடர்ச்சியான இடைவேளைகளில் வேகமாக வீழத்தப்பட்டமையினால் ஓட்ட எண்னிக்கை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இருந்தாலும் நுட்பமாக விளையாடிய விராத் கோலி தொடர்ச்சியாக ஓட்ட எண்ணைக்கையினை உயர்த்தினார். சராசரி இணைப்பாட்டங்களை அனைவருடனும் பகிர்ந்து இந்த தொடரின் இரண்டாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். விளையாடிய மூன்று போட்டிகளிலும் 30 ஓட்டங்களை அவர் கடந்துள்ளார்.
150 ஓட்டங்களுக்கு மேலான ஓட்ட எண்ணிக்கையினை துரத்தியடிப்பது கடினம் என்றே கருதப்படுகிறது. இவ்வாறான நிலையில் பாகிஸ்தான் அணி 182 ஓட்டங்களை பெற வேண்டும். ஆனாலும் கடந்த போட்டிகளில் 150 ஓட்டங்களுக்கு மேல் துரதியடிக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக துடுப்பாடும் அணிக்கு வாய்ப்புகள் அதிகமுள்ளன என்ற நிலையில் பாகிஸ்தான் அணி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற போராடும்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புள்ள மைதானத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஷதாப் கான், முகமட் நவாஸ் ஆகியோர் மூன்று விக்கெட்களை பகிர்ந்து கொண்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் அவ்வளவு சிறப்பாக பந்துவீசவில்லை.
இந்த ஓட்ட எண்ணிக்கையினை பாகிஸ்தான் அணி பெறாமல் தடுக்க இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் போராட வேண்டிய நிலையே காணப்படுகிறது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| லோகேஷ் ராகுல் | பிடி – முகமட் நவாஸ் | ஷதாப் கான் | 28 | 20 | 1 | 2 |
| ரோகித் சர்மா | பிடி – நசீம் ஷா | ஹரிஸ் ரவுஃப் | 28 | 16 | 3 | 1 |
| விராட் கோலி | Run Out | 60 | 44 | 4 | 1 | |
| சூர்யகுமார் யாதவ் | பிடி – ஆசிப் அலி, | முகமட் நவாஸ் | 13 | 10 | 2 | 0 |
| ரிஷாப் பான்ட் | பிடி – ஆசிப் அலி, | ஷதாப் கான் | 01 | 01 | 0 | 0 |
| ஹார்டிக் பாண்ட்யா | பிடி – முகமட் நவாஸ் | மொஹமட் ஹஸ்னைன் | 00 | 02 | 0 | 0 |
| தீபக் கூடா | பிடி – முகமட் நவாஸ் | நசீம் ஷா | 16 | 15 | 2 | 0 |
| புவனேஷ்வர் குமார் | 00 | 00 | 0 | 0 | ||
| ரவி பிஷோனி | 08 | 02 | 2 | 0 | ||
| உதிரிகள் | 12 | |||||
| ஓவர் 10 | விக்கெட் 07 | மொத்தம் | 181 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| நசீம் ஷா | 04 | 00 | 45 | 01 |
| மொஹமட் ஹஸ்னைன் | 04 | 00 | 38 | 01 |
| ஹரிஸ் ரவுஃப் | 04 | 00 | 38 | 01 |
| முகமட் நவாஸ் | 04 | 00 | 25 | 01 |
| ஷதாப் கான் | 04 | 00 | 25 | 02 |
அணி விபரம்
பாகிஸ்தான்
பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 ஆசிப் அலி, 5 இப்திகார் அகமட், 6 குஷ்தில் ஷா, 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 மொஹமட் ஹஸ்னைன் 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா
இந்தியா
1 லோகேஷ் ராகுல் 2 ரோகித் சர்மா (தலைவர்) 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ், 5, ரிஷாப் பான்ட் 6 தீபக் கூடா 7 ஹார்டிக் பாண்ட்யா 8 புவனேஷ்வர் குமார், 9 ரவி பிஷோனி 10 யுஸ்வேந்திர சாஹல், 11 அர்ஷ்தீப் சிங்