சம்பளத்தை உயர்த்தி கேட்கும் நடிகர் தனுஷ்

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியால் உச்சி மகிழ்ந்து வரும் நடிகர் தனுஷ் அந்த படத்திற்காக 15 கோடி சம்பளம் வாங்கியிருந்த நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படத்தில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த மாதமே ஆரம்பிக்கவிருந்த நிலையில் இன்னும் தொடங்கவில்லை. மேலும் தனுஷ் தன் சம்பளத்தை அதிகரிக்கும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.தொடர்ந்தும் இத் திரைப்படத்திற்காக 30 கோடி ரூபாவாக சம்பளத்தை உயர்த்தியுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றன. 

Social Share

Leave a Reply