இந்தியா, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் இந்தியா அணி 06 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியுள்ளது.
மழை காரணமாக 8 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் முதலில் துடுப்பாப்டியா அவுஸ்திரேலிய அணி 5 விக்ட்களை இழந்து 90 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆரூன் பிஞ்ச் அதிரடியாக துடுப்பாட மறுபக்க விக்கெட்கள் தொடர்ச்சியாக வீழத்தப்பட்டன. இறுதியாக மத்தியூ வேட் அதிரடி நிகழ்த்தி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொடுத்தார். ஆட்டமிழக்காமல் 43(20) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார் வேட். பிஞ்ச் 30(15) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் அக்ஷர் பட்டேல் 2 விக்ட்களையும், ஜஸ்பிரிட் பும்ரா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி ரோஹித் ஷர்மாவின் அதிரடி மூலமாக வெற்றி பெற்றுக் கொண்டது. 46(20) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அவர் பெற்று கொடுத்தார். தினேஷ் கார்த்திக் இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 2 பந்துகளில் 10 ஓட்டங்களை பெற்று போட்டியினை நிறைவு செய்தார். கோலி 11 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் அடம் ஷம்பா 3 விக்கெட்களையும், பட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
நாளை மறுதினம் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நடைபெறவுள்ளது.