திருகோணமலையில் பூப்பந்து உபகரணங்கள் கையளிப்பு

உலகத்த தமிழர் பூப்பந்து பேரவையின் ஸ்தாபகர் கந்தையா சிங்கம் இலங்கைக்கு அண்மையில் வருகை தந்திருந்த வேளையில், திருகோணமலையில் இறகுப்பந்து விளையாட்டு வீர, வீராங்கனைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடனும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற அதேவேளை, தெரிவு செய்யபப்ட்ட வீர வீராங்கனைகளுக்கு பூப்பந்து உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

WTBF திருகோணமலை கிளை பிரதம நிர்வாகி வைத்தியர் நிலோஜனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திறமை அடிப்படையிலும் வசதி குறைந்தவர் என்ற ரீதியிலும் செல்வன் கரிகாலன் எனும் வீரருக்கு பிரித்தானிய “First Choice Badminton Club” (FCBC) என்னும் கழகம்தின் பெயரால் அதன் தலைவர் ரகுராஜ் வழங்கிய சிறந்த badminton racket மற்றும் பாதணியும் வழங்கப்பட்டன.

அதே போன்று திறமை அடிப்படையிலும் வசதி குறைந்த ரீதியிலும் செல்வன் மஹிதாரன் எனும் வீரருக்கு பிரான்ஸ் WTBF நிர்வாக உறுப்பினர் ராஜ்குமாரினால் வழங்கப்பட்ட தொழில்சார் பூப்பந்து racket ஒன்று வழங்கப்பட்டது. இவற்றை கந்தையா சிங்கம் வீரர்களுக்கு கையளித்தார்.

சுவிஸ் நாட்டை சேர்ந்த, உலக தமிழர் பூப்பந்து பேரவை சுவிஸ் கிளையுடன் இணைந்து செயற்படும் மேற்கத்தையரான தோமஸ் ரிச்சர்ட் அவர்களினால் வழங்கப்பட்ட பூப்பந்தாட வலைகள் வழங்கப்பட்ட அதேவேளை, உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவை, கனடா நிர்வாக இயக்குனர் ஜெயகாந் என்பவரினால் வழங்கப்பட்ட பூப்பந்துகள் போன்றவைகளையும் கந்தையா சிங்கம்
திருகோணாமலை வீரர்களது பாவனைக்காக வைத்தியர் நிலோஜன் தலைமையிலான உலகத்தமிழர் பூப்பந்தாட்ட இலங்கை, திருகோணமலை கிளையினருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் உலகத்த தமிழர் பூப்பந்தாடப் பேரவையின் வேலைத்திட்டங்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்தார்கள்.

Social Share

Leave a Reply