“திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது” என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு இன்று (02.10) காலை விஜயம் செய்து பூசை வழிபாட்டில் கலந்து கொண்டதுடன் ஆலய நிர்மாண பணிகளையும் பார்வையிட்டார்.
இதனையடுத்து கோயில் நிர்வாகத்தினரையும் சந்தித்த கலந்துரையாடியதுடன் கோயில் நிர்வாகத்தினர் இந்திய உயர் ஸ்தானிகர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
“இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நான் வருகை தந்திருக்கிறேன். இன்றைய நாள் ஒரு விசேட நாள் நவராத்திரி காலம் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதே காலத்தில் காந்தி ஜெயந்தி நடைபெறுகின்ற இன்றைய நாளில் இந்த இடத்துக்கு நான் விஜயம் செய்து பூஜை வழிபாடுகளிலுல் கலந்து கொண்டது மாத்திரமில்ல இந்த ஆலயத்தினுடைய தொன்மையான வரலாறு பூர்வீகமான விடயங்கள் அனைத்தையும் அறிஞர்களும், ஆலய நிர்வாகிகளும் எனக்கு நிறைந்த தெளிவுடன் அறிய தந்திருக்கின்றார்கள்.
எதிர்காலத்தில் இந்த ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது என்பதை மிகத் தாழ்மையாக தெரிவித்துக் கொள்கிறேன்” என இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆலயம் ஒரு புனிதமானது மாத்திரமில்ல நாயன்மார்களால் பாடப்பட்ட ஒரு ஆலயம் என்பதை நான் அறிவேன். அந்த வகையில் இந்த ஆலயத்தினுடைய எதிர்காலம் நல்லாக அமைய வேண்டும்.
இங்கு ஒரு ராஜகோபுரம் அமைக்கப்பட இருக்கின்றதையும், ஆலய நிர்வாகிகள் எனக்கு தெரிவித்தார்கள். அந்த விடயம் தொடர்பாகவும் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய உயர்ஸ்தானிகரின் இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன், இந்திய தூதரக அரசியல் துறை ஆலோசகர் பானூ பிரகாஸ் மற்றும் இந்திய தூதுவரின் பாரியார், ஆலய நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.