யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபபவர்களுக்கும், போதை பொருள் பாவனைகளில் ஈடுபடுபவர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், திடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண கோட்டை பகுதியை பார்வையிட்ட மாநகர முதல்வர், அங்கு இடம்பெற்றுவரும் அநாகரிக செயற்பாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் நேரடியாக அதனை அவதானித்துமுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் அவதானிக்கப்பட்டால் அவர்களை கடுமையாக எச்சரித்து பொலிஸார் ஊடாக பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மணிவண்ணன் மேலும் அறிவித்துள்ளார்.