லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். 05 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள விலை சீர்திருத்த கோவையின் அடிப்படையில் இந்த விலை குறைப்பு நடைபெறவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் தற்போது விலை குறைப்பு செய்யப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சி இந்த விலை குறைப்புக்கு காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

Social Share

Leave a Reply