எரிபொருள் விநியோக தடை போலி செய்தி – அமைச்சர்

எரிபொருள் விநியோகஸ்தர்களின் பணி பகிஷ்கரிப்பினால் எரிபொருள் விநியோகம் தடைப்படுமென பகிரப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். சமூக வலை தளங்களில் பகிரப்படும் செய்திகள் போலியானவை என அவர் மேலும் கூறியுள்ளார்.

போலியான செய்திகளினால் மக்கள் குழப்பமடைய தேவையிலை என மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே வழங்கப்பட்ட செயற்பாட்டு கட்டண தள்ளுபடி 45 சதவீதத்தை வசூலிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து பெற்றோல் விநியோகஸ்தர் குழுவொன்று, நேற்றைய தினம்(03.10), இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply