இலங்கை தமிழர் கலாநிதி ஜனகனுக்கு டுபாயில் கெளரவிப்பு

டுபாயில் அண்மையில் டுபாய் தமிழ் தொழில் முனைவோர் அமைப்பினால் வருடாவரும் நடாத்தும் கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. 1972 ஆம் ஆண்டு புதிய டுபாய் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இந்த அமைப்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதரத்தில் பாரிய பங்களிப்பு வழங்கி வருவதோடு, தமிழ் பேசும் மக்களுக்காக செயற்பட்டு வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 இலட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை மையப்படுத்தி, அவர்களின் நலனுக்காக இந்த அமைப்பு செயற்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு, ஐ.டி.எம் சர்வதேச பலக்லைக்கழகத்தின் தலைவர் கலாநிதி ஜனகன், ஐக்கிய அரபு இராட்சியம் டுபாயில் ஐ.டி.எம் சர்வதேச பல்கலைக்கழகத்தினை ஆரம்பித்து அதன் மூலம் கல்வி சேவையினை வழங்குவதற்காகவும், குறிப்பாக இங்கிலாந்தின் சட்ட கல்வியினை ஐக்கிய அரபு இராட்சியத்தில் வழங்குவதற்காவும் குறித்த அமைப்பு கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தியினை அவர்களது நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததோடு அவருக்கு கெளரவிப்பினையும் செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் ஐக்கிய அரபு இராட்சியத்தில் உள்ள மாணவர்களுக்கு, இந்த அமைப்பினூடாக ஐ.டி.எம் சர்வதேச பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு ஒருவருக்கு 15,000 திர்ஹாம் பெறுமதியான (இலங்கை மதிப்பு கிட்டத்தட்ட 1,500,000/-) புலமை பரிசிலை ஜனகன் கையளித்தார். இவ்வாறு 10 மாணவர்கள் கல்வி கற்பதற்கான புலைமைப்பரிசிலை அவர் வழங்கியுள்ளார். இலங்கை பெறுமதிப்படி 1 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான புலமை பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் ஐ.டி.எம் நிறுவனத்தினூடாக கல்வி சேவையினை இலங்கை பூராகவும் வழங்கி வரும் ஜனகன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.டி.எம் சர்வதேச பல்கலைக்கழகத்தினை ஆர்மபித்து அதனூடாக அங்குள்ள சர்வதேச மாணவர்களுக்கும் கல்வி சேவையினை வழங்கி வருகிறார். ஐ.டி.எம் சர்வதேச பல்கலைக்கழகம் இங்கிலாந்தினை மையமாக கொண்டு இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, கம்போடியா ஆகிய நாடுகளிலும் கல்வி சேவையினை வழங்கிவருவது சுட்டிக்காட்டத்தக்கது.

ஷார்ஜா ஐ.டி.எம் சர்வதேச பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர்கள் அடங்கலாக பல நாட்டு மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர். சட்டத்துறை, வியாபார முகாமைத்துவம் போன்ற கற்கை நெறிகளை அதிமானவர்கள் கற்பித்து வருகின்றனர். இங்கே கல்வி கற்பதன் மூலம் இலகுவாக இங்கிலாந்துக்கு சென்று உயர்கல்வியினை தொடரும் வாய்ப்பும் பலருக்கும் கிடைத்து வருகிறது.

இலங்கை தமிழர் கலாநிதி ஜனகனுக்கு டுபாயில் கெளரவிப்பு

Social Share

Leave a Reply