பொருளாதார ஸ்திரப்படுத்தல் துணைக் குழுவின் தலைவராக சம்பிக்க ரணவக்க தெரிவு

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காண தேசிய பேரவையின் கீழ் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் உபகுழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்குள் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதே உபகுழுவின் நோக்கமாகும்.

பாட்டலியின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வஜிர அபேவர்தனவினால் முன்மொழியப்பட்டதுடன், பிரேரணையை அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் ஆகியோர் ஆதரித்தனர்.

இந்த கூட்டத்துக்கு அமைச்சர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வஜிர அபேயவர்தன, எம்.ராமேஸ்வரன், A. L. M. அதாவுல்லா, ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ரிக்கிரி ஜயதிலக ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply