பயங்கரவாத தடுப்பிலிருந்த ஒருவர் விடுதலை

பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் மூவர் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஹஷான் ஜீவந்த நேற்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டதனை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் அவருக்கெதிரான விசாரணைகளை நிறைவு செய்துள்ள நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் இரத்தாகியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரேமித்த பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் கைதான இவரும், வசந்த முதலிகே, கலேவெவ ஸ்ரீதம்மா ஆகிய மூவரையும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கினார்.

Social Share

Leave a Reply