12 மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிகவும் அதிகமான மழை வீழ்ச்சி காணப்படுமென சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம், வட மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் ஆகிய பகுதிகளிலும், தென் மாகாணத்தின் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் இடியுடன் கூடிய மின்னல் காணப்படுமெனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.