பும்ராவின் இடத்துக்காக மூவர் இந்தியா அணியுடன் இணைந்தனர்

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக கிண்ண 20-20 தொடருக்கான இந்தியா அணிக்கு மொஹமட் ஷமி, ஷர்தூள் தாகூர், மொஹமடீ ஷிராஜ் ஆகியோரில் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஜஸ்பிரிட் பும்ரா உபாதையடைந்துள்ள நிலையில் மேலதிக வீரர்களாக இவர்கள் மூவரும் பயணமாகியுள்ளனர்.

20-20 உலக்கைக்கிண்ண தொடருக்கான இந்தியா அணியின் மேலதிக வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்ணோய், தீபக் சஹார் ஆகியோர் தெரிவி செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் தீபக் சஹார் காயமைடந்துள்ளார். மற்றைய இருவரையும் விடுத்தது பந்துவீச்சினை பலப்படுத்தும் நோக்கில் பந்துவீச்சாளர்கள் மூவரை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. காயமடைந்த ஜஸ்பிரிட் பும்ராவின் இடத்துக்கான வீரர் இன்னும் பெயரிடவில்லை. அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியா அணியோடு இணைந்துள்ள மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், ஷ்ரடூள் தாகூர் ஆகிய மூவருரில் ஒருவர் அணியில் இணையவுள்ளார். மொஹமட் ஷமிக்கு அதிக வாய்ப்புகள் உளளதாகவே நம்பப்படுகிறது.

இந்தியா அணி இம்மாதம் 6 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு பயணித்து அவுஸ்திரேலியாவிலுள்ள பேர்த்தில் தங்கியுள்ளது. அங்கு வீரர்கள் ஒரு வார பயிற்சி முகாம் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா பதினொருவர் அணிக்கு எதிராக ஒரு பயிற்சி போட்டியில் விளையாடியுள்ளனர். இவர்களின் அடுத்த பயிற்சி போட்டி இன்று நடைபெறவுள்ளது.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 20-20 தொடரில் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு உபாதை ஏற்பட்டமையினால் அவர் அணியிலிருந்து விலகினார், இந்தியா அணிக்கு இது கடுமையான அடியாக விழுந்தது.

ஷமி 2021 ஆண்டு 20-20 உலகககிண்ண தொடருக்கு பின்னர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. 2021 ஆம் ஆண்டு 20-20 உலகக்கோப்பை நொவெம்பர் மாதம் நிறைவடைந்தது. கொவிட் 19 போட்டியைத் தொடர்ந்து ஷமி பெங்களூரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் அகடமியில் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

Social Share

Leave a Reply