ICC T 20 உலக கிண்ண தொடரின் மூன்றாம் நாள் போட்டிகள் இன்று அவுஸ்திரேலியா ஜிலோங்கில் ஆரம்பித்துள்ளன. இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இலங்கை அணியின் தலைவர் தஸூன் சாணக்க தானும் களத்தடுப்பை தெரிவு செய்ய ஆர்வமாக இருந்ததாக தெரிவித்தார்
இலங்கை அணி சார்பாக தனுஷ்க குணதில நீக்கப்பட்டு சரித் அசலங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அணி விபரம்
இலங்கை
1 குசல் மென்டிஸ் , 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 தனஞ்சய டி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 சரித் அசலங்க , 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 ப்ரமோட் மதுஷன் 11 டுஸ்மாந்த சமீரா
ஐக்கிய அரபு அமீரகம்,
சுந்தனகபோயில் ரிஸ்வான், வ்ரிதியா அரவிந்த், அயான் அப்ஷால் கான், அஹமட் ரஷா, ஆர்யன் லக்ரா, பசில் அஹமட், சிராக் சூரி, ஜுனைட் சித்திக், காஷிப் டோட், கார்த்திக் மெய்யப்பன், முஹமட் வசீம், சபீர் அலி, அலிஷான் ஷராபு, ஷகூர் கான், ஷவர் பரீட்
இன்றைய முதலாவது போட்டியில் நெதர்லாந்து அணி நமிபியா அணியினை வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கை அணி மீது மேலதிக அழுத்தம் உருவாகியுள்ளது. இலங்கை, ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கிடையிலான போட்டியில் தோல்வியடையும் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும். நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாக வேண்டுமெனில் ஓட்ட நிகர சராசரி வேகத்தினையும் அதிகரிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது இலங்கை அணி மீது மேலதிக அழுத்தத்தை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.