இலங்கைக்கான முக்கிய போட்டி – உலக கிண்ண மூன்றாம் நாள்

ICC T 20 உலக கிண்ண தொடரின் மூன்றாம் நாள் போட்டிகள் இன்று அவுஸ்திரேலியா ஜிலோங்கில் ஆரம்பிக்கவுள்ளன. இன்றைய போட்டிகளில் இலங்கை குழுவான குழு A இன் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலாவது போட்டி நெதர்லாந்து மற்றும் நமிபியா அணிகளிக்கிடையிலான போட்டியாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுமணி இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பினை அதிகமாக பெற்றுக் கொள்ளும். நமிபியா அணி வெற்றி பெற்றுக்கொண்டால் தெரிவாகிவிட்டார்கள் என்ற நிலை ஏற்படும். அவர்களது ஓட்ட நிகர சராசரி வேகம் அதிகம்.

இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி. இந்தப் போட்டி இரண்டு அணிகளுமே முக்கியமானது. தோல்வியடையும் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும். இவ்வாறான நிலையில் முதற் போட்டியில் மோசமாக தோல்வியடைந்த இலங்கை அணி தமது மீள் வருகைக்காக போராடும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதோடு ஓட்ட நிகர சராசரி வேகம் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் முக்கியமானதாக அமைக்கிறது.

நேற்று போட்டிகள் நடைபெறும் ஜீலோங்கில் மழை பெய்து போட்டிகளில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இன்று மழைக்கான எதிர்வு கூறல்கள் இல்லை. அதேபோன்று இலங்கை அணி வியாழக்கிழமை விளையாடவுள்ள போட்டி மழை காரணமாக குழப்பப்டும் வாய்ப்புகள் இருப்பதாக வாநிலை எதிர்வுகூறல் கள் மூலம் தெரியவந்தது. இருப்பினும் இன்றைய எதிர்வு கூறல் படி மழைக்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளன. ஆனால் வெள்ளிக்கிழமை மழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

Social Share

Leave a Reply