ICC T20 உலகக்கிண்ண தொடரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று (02.11) அடிலைட்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. இன்னமும் இந்தியா அணி முழுமையாக தெரிவு செய்யப்படவில்லை. 6 புள்ளிகளோடு இந்தியா அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
டக்வத் லுயிஸ் முறையில் ஓவர்களும் வெற்றி இலக்கும் குறைக்கப்பட்டால் பங்களாதேஷ் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. 7 ஓவர்களுக்கு 49 ஓட்டங்கள் வெற்றி இலக்காக அறிவிக்கப்பட்டன ஆனால் பங்களாதேஷ் அணி அந்த ஓட்டத்தை விட 17 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி ரோஹித்’ஷர்மாவின் விக்கெட்டினை வேகமாக இழந்த போதும், லோகேஷ் ராகுல், விராத் கோலி இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர். இருவரும் அரைச்சததங்களை பூர்த்தி செய்தனர். கோலி இந்த உலக கிண்ண தொடரில் மூன்றாவது தடவையாக ஆட்டமிழக்காமல் அரைச்சதத்தை பெற்றுக் கொண்டார். சூர்யகுமார் யாதவ் அதிரடி நிகழ்த்தி ஆட்டமிழக்க மத்திய வரிசை சொதப்பியது. இதன் காரணமாக இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை 184 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இந்த இலக்கினை துரதியடிப்பது கடினம் என்ற நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிட்டொன் டாஸ் அதிரடி நிகழ்த்த பங்காளதேஷ் பக்கமாக வெற்றி வாய்ப்பு உருவானது. 7 ஆவது ஓவரில் மழை குறிக்கிட்டது. போட்டி அவ்வாறே நிறுத்தப்பட்டிருந்தால் பங்களாதேஷ் அணி 17 ஓட்டங்களில் வெற்றி பெற்றிருக்கும்.
16 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டு 151 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் போட்டி ஆரம்பித்ததும் டாஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க இந்தியாவின் பக்கமாக வாய்ப்பு மாறியது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ | பிடி – சூர்யகுமார் யாதவ் | மொஹமட் ஷமி | 21 | 25 | 1 | 1 |
| லிட்டொன் டாஸ் | Run Out | 60 | 27 | 7 | 3 | |
| ஷகிப் அல் ஹசன் | பிடி – தீபக் ஹூடா | அர்ஷ்தீப் சிங் | 13 | 12 | 2 | 0 |
| அபிப் ஹொசைன் | பிடி – சூர்யகுமார் யாதவ் | அர்ஷ்தீப் சிங் | 03 | 05 | 0 | 0 |
| யசிர் அலி | பிடி – அர்ஷ்தீப் சிங் | ஹார்டிக் பாண்ட்யா | 01 | 03 | 0 | 0 |
| நுருல் ஹசன் | 25 | 14 | 2 | 1 | ||
| மொஸடெக் ஹொசைன் | நுருல் ஹசன் | 06 | 03 | 0 | 1 | |
| டஸ்கின் அஹமட் | 12 | 07 | 1 | 1 | ||
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 16 | விக்கெட் 06 | மொத்தம் | 145 |
மொசடெக் ஹொசைன்
டஸ்கின் அஹமட்
ஹசன் மஹ்முட்
மெஹதி ஹசன் மிர்ஸா
முஸ்டபைஷூர் ரஹ்மான்
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| புவனேஷ்வர் குமார் | 03 | 00 | 27 | 00 |
| அர்ஷ்தீப் சிங் | 04 | 00 | 38 | 02 |
| மொஹமட் ஷமி | 03 | 00 | 25 | 01 |
| அக்ஷர் படேல் | 01 | 00 | 06 | 00 |
| ரவிச்சந்திரன் அஷ்வின் | 02 | 00 | 19 | 00 |
| ஹார்டிக் பாண்ட்யா | 03 | 00 | 28 | 02 |
ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராஹுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| லோகேஷ் ராஹுல் | பிடி – முஸ்டபைஷூர் ரஹ்மான் | ஷகிப் அல் ஹசன் | 50 | 32 | 3 | 4 |
| ரோஹித் ஷர்மா | பிடி – யசீர் அலி | ஹசன் மஹ்முட் | 02 | 08 | 0 | 0 |
| விராட் கோலி | 64 | 44 | 8 | 1 | ||
| சூரியகுமார் யாதவ் | Bowled | ஷகிப் அல் ஹசன் | 30 | 16 | 4 | 0 |
| ஹார்டிக் பாண்ட்யா | பிடி – யசீர் அலி | ஹசன் மஹ்முட் | 05 | 06 | 0 | 0 |
| தினேஷ் கார்த்திக் | Run Out | 07 | 05 | 01 | 0 | |
| அக்ஷர் படேல் | பிடி – ஷகிப் அல் ஹசன் | ஹசன் மஹ்முட் | 07 | 05 | 1 | 0 |
| ரவிச்சந்திரன் அஷ்வின் | 13 | 06 | 1 | 1 | ||
| உதிரிகள் | 06 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 184 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| டஸ்கின் அஹமட் | 04 | 00 | 15 | 00 |
| சரிபுல் இஸ்லாம் | 04 | 00 | 57 | 00 |
| ஹசன் மஹ்முட் | 04 | 00 | 47 | 03 |
| முஸ்டபைஷூர் ரஹ்மான் | 04 | 00 | 31 | 00 |
| ஷகிப் அல் ஹசன் | 04 | 00 | 33 | 02 |