ICC T20 உலககிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குத் தெரிவானது பாகிஸ்தான் அணி. மூன்றாவது தடவையாக 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
அரை இறுதி போட்டியில் சவாலான வெற்றி இலக்கினை நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயித்த போதும், முதலில் துடுப்பாடும் அணிக்கே அதிக வாய்ப்புகள் என கூறப்பட்ட நிலையிலும் பாகிஸ்தான் அணி அதிரடியாக துடுப்பாடி வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பாபர் அஸாம் மற்றும் முகமட் ரிஷ்வான் ஆகியோர் இலகுவாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி இலகுவான வெற்றியினை பெற்றுக்கொண்டது.
பாபர் அசாம், முஹமட் ரிஷ்வான் ஆகியோர் அவர்களின் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர். இருவரும் 105 ஓட்டங்களை ஓட்ட இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்துதடுமாறியது. நான்காவது விக்கெட்டுக்காக கேன் வில்லியம்சன், டரில் மிச்செல் ஆகியோர் இணைந்து மீட்டெடுத்தனர். இறுதி நேரத்தில் அதிரடியாக அடித்தாடி நியூசிலாந்து அணி ஓட்டங்களை பெற முடியாமல் போனமை நியூசிலாந்து அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு நியூஸிலாந்து அணிக்கு சவாலாக அமைந்தது. ஷஹின் ஷா அப்ரிடி இன்றும் அச்சுறுத்தும் விதமாக பந்துவீசினார்.
இதுவரையில் 20-20 உலகக்கிண்ண அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியினை வெற்றி பெற்றதில்லை.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
முஹமட் ரிஸ்வான் | பிடி – க்ளென் பிளிப்ஸ் | ரென்ட் போல்ட் | 57 | 43 | 5 | 0 |
பாபர் அசாம் | பிடி – டரில் மிச்செல் | ரென்ட் போல்ட் | 53 | 42 | 7 | 0 |
மொஹமட் ஹரிஸ் | பிடி – பின் அலென் | மிட்செல் சென்டனர் | 30 | 26 | 2 | 1 |
ஷான் மசூட் | 07 | 05 | 0 | 0 | ||
இப்திகர் அஹ்மத் | 00 | 00 | 0 | 0 | ||
மொஹமட் நவாஸ் | ||||||
ஷதாப் கான் | ||||||
மொஹமட் வசிம் | ||||||
நசீம் ஷா | ||||||
ஹரிஸ் ரௌப் | ||||||
உதிரிகள் | 10 | |||||
ஓவர் 19.1 | விக்கெட் 03 | மொத்தம் | 156 |
முஹமட் ரிஸ்வான், பாபர் அசாம், ஷான் மசூட், இப்திகர் அஹ்மத், ஷதாப் கான், ஹைதர் அலி, மொஹமட் நவாஸ், அசிப் அலி, ஷயின் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரௌப், நசீம் ஷா
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ரென்ட் போல்ட் | 04 | 00 | 33 | 02 |
ரிம் சௌதீ | 3.1 | 00 | 26 | 00 |
லூகி பெர்குசன் | 04 | 00 | 37 | 00 |
மிட்செல் சென்டனர் | 04 | 00 | 26 | 06 |
இஸ் சோதி | 04 | 00 | 26 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பின் அலென் | L.B.W | ஷயின் ஷா அப்ரிடி | 04 | 03 | 1 | 0 |
டெவொன் கொன்வே | Run Out | 21 | 20 | 3 | 0 | |
கேன் வில்லியம்சன் | Bowled | ஷயின் ஷா அப்ரிடி | 46 | 42 | 1 | 1 |
க்ளென் பிளிப்ஸ் | பிடி – மொஹமட் நவாஸ் | மொஹமட் நவாஸ் | 06 | 08 | 1 | 0 |
டேரில் மிட்செல் | 53 | 35 | 3 | 1 | ||
ஜேம்ஸ் நிஷாம் | 16 | 12 | 1 | 0 | ||
மிட்செல் சென்டனர் | ||||||
ரிம் சௌதீ | ||||||
உதிரிகள் | 03 | |||||
ஓவர் 20 | விக்கெட் 04 | மொத்தம் | 152 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஷயின் ஷா அப்ரிடி | 04 | 00 | 24 | 02 |
நசீம் ஷா | 04 | 00 | 30 | 00 |
ஹரிஸ் ரௌப் | 04 | 00 | 32 | 00 |
மொஹமட் வசிம் | 02 | 00 | 15 | 00 |
ஷதாப் கான் | 04 | 00 | 33 | 00 |
மொஹமட் நவாஸ் | 02 | 00 | 12 | 01 |