இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான, முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டித்தொடரின் முதற் போட்டியினை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இரு அணிகளும் இதுவரையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. இரு அணிகள் மட்டும் விளையாடும் முதற் தொடர் இதுவாகும். ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியினை இரண்டாவது தடவையாக பெற்றி பெற்றுள்ளது. இதற்க்கு முதலில் 2018 ஆம் ஆண்டு அபுதாபியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி பலமான ஓட்ட எண்ணிக்கையான 294 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கையினை இந்த மைதானத்தில் துரத்தி அடிப்பது இலகுவானதல்ல.
இலங்கை அணி 234 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆரம்பம் முதலே துடுப்பாட்டத்தில் இலங்கை அணி தடுமாறி வந்தது. பத்தும் நிஸ்ஸங்க மாத்திரம் ஒரு பக்கமாக ஓட்டங்களை உயர்த்தி விக்கெட்களை ஒரு பக்கமாக காப்பாற்றினார். அவர் 85 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். வனிந்து ஹஸரங்க இறுதி நேரத்தில் தனித்து நின்று அதிரடி நிகழ்த்திய போதும் அது இலங்கை அணியின் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.
இலங்கை அணியின் மற்றைய சகல துடுப்பாட்ட வீரர்களும் பொறுமையற்று, நிதானமின்றி துடுப்பாடி ஆட்டமிழந்தனர். இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் நின்று நிதானமாக துடுப்பாடும் அடிப்படையினை கையாள வேண்டும். இது தொடர் சிக்கலாகவே இலங்கை அணிக்கு காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அழுத்தம் வழங்கினார்கள். குலாப்டின் நைப், பஷல்ஹக் பரூக்கி ஆகியோர் தலா 03 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இப்ராஹிம் ஷர்டான் சிறப்பாக துடுப்பாடி 106 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இவரும் ரஹ்மனுள்ள குர்பாஸூம் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் இப்ராஹிம் ஷர்டான், ரஹ்மத் ஷா ஜோடி 118 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட்டுக்காக பகிர்ந்து கொண்டது. ரஹ்மத் ஷா அரைச்சதத்தை பூர்த்திசெய்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்ட வீரர்களை அச்சறுத்தும் அளவுக்கு அமையவில்லை. கடினமான பந்துகளை சிறப்பான முறையில் எதிர்கொண்டு துடுப்பாடினார்கள். அதிரடி துடுப்பாட்டங்களுக்கு செல்லாமல் நிதானமாக ஓட்டங்களை ஓடி பெற்றனர். இதன் காரணமாகவே ஓட்ட எண்ணிக்கை மிகவும் சிறப்பாக உயர்ந்தது.
வனிந்து ஹஸரங்க முதல் விக்கெட்டினை கைப்பற்றி கொடுத்தார். ஆனால் மற்றைய பந்துவீச்சாளர்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் மோசமாகவே பந்துவீசினார்கள். இறுதியில் ஹசரங்க 2 விக்கெட்களையும், லஹிரு குமார, மஹீஸ் தீக்ஷண, தனஞ்சய லக்ஷான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | Bowled | பசல்ஹக் பரூகி | 42 | 34 | 07 | 0 |
| குசல் மென்டிஸ் | L.B.W | யாமின் அஹமட்கஷாய் | 01 | 05 | 0 | 0 |
| டினேஷ் சந்திமால் | Bowled | பசல்ஹக் பரூகி | 11 | 0 | 0 | |
| தனஞ்சய டி சில்வா | Bowled | குலாப்டின் நைப் | 08 | 09 | 0 | 0 |
| சரித் அசலங்க | பிடி – இப்ரஹிம் சட்ரன், | குலாப்டின் நைப் | 10 | 18 | 0 | 0 |
| தஸூன் ஷானக | பிடி – யாமின் அஹமட்கஷாய் | குலாப்டின் நைப் | 16 | 27 | 2 | 0 |
| வனிந்து ஹசரங்க | Bowled | பசல்ஹக் பரூகி | 09 | 09 | 1 | 0 |
| தனஞ்சய லக்ஷான் | Bowled | பசல்ஹக் பரூகி | 06 | 04 | 1 | 0 |
| மஹீஷ் தீக்ஷன | L.B.W | யாமின் அஹமட்கஷாய் | 03 | 12 | 0 | 0 |
| கஸூன் ரஹித | L.B.W | ரஷீத் கான் | 08 | 05 | 02 | 0 |
| லஹிரு குமார | 00 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 13 | |||||
| ஓவர் 38 | விக்கெட் 10 | மொத்தம் | 234 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| பசல்ஹக் பரூகி | 09 | 00 | 49 | 04 |
| யாமின் அஹமட்கஷாய் | 06 | 00 | 46 | 02 |
| முஜீப் உர் ரஹ்மான் | 05 | 00 | 33 | 03 |
| குலாப்டின் நைப் | 08 | 00 | 34 | 03 |
| ரஷீத் கான் | 08 | 00 | 40 | 01 |
| மொஹமட் நபி | 02 | 00 | 27 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரஹ்மனுள்ளா குர்பாஸ் | L.B.W | வனிந்து ஹசரங்க | 53 | 55 | 9 | 0 |
| இப்ரஹிம் சட்ரன் | பிடி – வனிந்து ஹசரங்க | மஹீஸ் தீக்ஷண | 106 | 120 | 11 | 0 |
| ரஹ்மத் ஷா | பிடி – குசல் மென்டிஸ் | லஹிரு குமார | 52 | 64 | 2 | 0 |
| நஜிபுல்லா சட்ரன் | பிடி – குசல் மென்டிஸ் , | வனிந்து ஹசரங்க | 42 | 25 | 5 | 1 |
| குல்படின் நைப் | பிடி – வனிந்து ஹசரங்க | தனஞ்சய லக்கஷான் | 22 | 24 | 2 | 1 |
| ரஷீத் கான் | Run Out | 04 | 05 | 0 | 0 | |
| மொஹமட் நபி | பிடி – தனஞ்சய லக்கஷான் | கசுன் ரஜித | 15 | 13 | 1 | 0 |
| ஹஸ்மதுல்லா ஷஹதி | Ruon Out | 02 | 02 | 0 | 0 | |
| முஜீப் உர் ரஹ்மான் | 01 | 01 | 0 | 0 | ||
| யாமின் அஹமட்கஷாய் | 00 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 10 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 08 | மொத்தம் | 294 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கசுன் ரஜித | 10 | 00 | 56 | 01 |
| தனஞ்சய லக்கஷான் | 06 | 00 | 43 | 01 |
| லஹிரு குமார | 08 | 00 | 54 | 01 |
| தஸூன் ஷானக | 03 | 00 | 19 | 00 |
| வனிந்து ஹசரங்க | 10 | 00 | 42 | 02 |
| மஹீஷ் தீக்ஷன | 10 | 00 | 62 | 01 |
| தனஞ்சய டி சில்வா | 03 | 00 | 14 | 00 |