நெதர்லாந்துக்கு, எகுவாடர் கடும் போராட்டம்.

கட்டாரில் நடைபெறும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் குழு A இற்கான நெதர்லாந்து, எகுவடார் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. வெற்றி பெறுமணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என்ற நிலையில் இரு அணிகளும் கடுமையாக போராடின.

போட்டி ஆரம்பித்து ஆறாவது நிமிடத்தில் நெதர்லாந்து அணி கோலினை பெற்றது. நெதர்லாந்து அணி பலமான அணி என்ற காரணத்தினால் அதிக கோல்களை பெறுவார்களென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் கோல்கள் பெறும் வாய்ப்பை எகுவாடர் அணி வழங்கவில்லை. கொடி கக்போ அந்த கோலை பெற்றுக்கொண்டார்.

கடுமையாக போராடிய எகுவாடர் அணி சார்பாக என்னர் வலன்சியா சமநிலை கோலை அடித்தார்.

போட்டி 1 – 1 என்ற சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இரு அணிகளுக்குமான வாய்ப்புகள் தொடர்கின்றன.

குழு A இல் நெதர்லாந்து, எகுவாடர், செனகல் ஆகிய அணிகளுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து காணப்படுகின்றன. கட்டார் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

Social Share

Leave a Reply