குரேஷியா அணி கனடா அணியினை உலககிண்ண தொடரில் 4- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அதேவேளை கனடா அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
போட்டி ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்தில் கனடா அணி சார்பாக அல்போன்சா டேவிஸ் பெற்ற கோளின் மூலமாக கனடா அணி முன்னிலை பெற்றுக்கொண்டது. 36 நிடங்கள் வரை கனடா முன்னிலை பெற்றிருந்த நிலையில் குரேஷியா அணி சார்பாக அன்றேஜ் ரமாறிச் அடித்த கோல் மூலமாக போட்டி சமநிலை அடைந்தது. 44 ஆவது நிமிடத்தில் மார்கோ லிவாஜா முன்னிலை கோலை அடித்தார். அதன் பின்னர் இரண்டாவது பாதி குரேஷியா வசமானது. 70 ஆவது நிமிடத்தில் அன்றேஜ் ரமாறிச் தனது இரண்டாவது கோலை அடிக்க, போட்டி நிறைவடையும் தறுவாயில் 94 ஆவது நிமிடத்தில் லவ்ரோ மஜர் நான்காவது கோலை அடித்தார்.
குழு F இல் குரேஷியா அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாக பெல்ஜியம் அணியுடன் தேவை சமநிலை முடிவு மட்டுமே. வெற்றி பெற்றால் பெல்ஜியமணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும். இந்த குழுவின் இறுதி கட்ட போட்டிகள் முதலாம் திகதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையவுள்ளன.
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
1 | குரேஷியா | 02 | 01 | 00 | 01 | 04 | 03 | 04 | 01 |
2 | மொரோக்கோ | 02 | 01 | 01 | 00 | 03 | 02 | 02 | 00 |
3 | பெல்ஜியம் | 02 | 01 | 00 | 00 | 03 | -01 | 01 | 02 |
4 | கனடா | 02 | 00 | 02 | 00 | 00 | -04 | 01 | 05 |