கமரூன், சேர்பியா போட்டி சமநிலையில் நிறைவு

உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரில் சேர்பியா மற்றும் கமரூன் அணிகளுக்கிடையில் இன்று (28.11) நடைபெற்ற முதற் போட்டி 3-3 என சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது. குழு G இற்க்காக இந்தப் போட்டி நடைபெற்றது.

இரு அணிகளும் முதற் போட்டிகளில் தொலைவியடைந்த இலையில் இன்றைய போட்டியில் சமநிலை முடிவுகளை பெற்றுள்ளன. அடுத்து பிரேஸில் கமரூன், சுவிற்சலாந்து சேர்பியா அணிகளுக்கிடையிலான போட்டிகளில் இரு அணிகளும் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்று வாய்ப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.

கமரூன் அணி சார்பாக 29 ஆவது நிமிடத்தில் ஜீன் சார்ள்ஸ் கஸ்டெல்லோட்டோ முதற் கோலை அடித்த போதும் முதற் பாதியின் மேலதிக நேரப்பகுதியில் சேர்பியா அணி சார்பாக அடுத்தடுத்த இரு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. ஸ்ட்ரஹிஞ்சா பவொலிக், சேர்ஜஜ் மிலின்கோவிக் சவிச் ஆகியோர் அந்த கோல்களை அடித்தனர்.

இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடன் 53 ஆவது நிமிடத்தில் சேர்பியா அணி சார்பாக மூன்றாவது கோலை அலெக்ஷான்டர் மிட்ரோவிச் பெற்றுக் கொடுத்தார். சேர்பியா அணி 3 – 1 என்ற முன்னிலையில் காணப்பட்ட வேளையில். 63 ஆவது நிமிடத்தில் கமரூன் அணி சார்பாக வின்சென்ட் அபூபக்கர் 2ஆவது கோலினை பெற்றுக்கொண்டார். 66 ஆவது நிமிடத்தில் எரிக் மக்சிம் சௌப்போ மொட்டிங் அடித்த கோல் மூலமாக போட்டி சமநிலை அடைந்து.

Social Share

Leave a Reply