இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆர்மபித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இலங்கை அணி சார்பாக டுனித் வெல்லாலகே மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் அணிக்குள் வருகை தந்துள்ளனர். தனஞ்சய லக்ஷன், லஹிரு குமாரா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக யாமின் அஹமட் ஷாய்க்கு பதிலாக நூர் அஹமட் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
வாநிலை சிக்கல்கள் இல்லை. போட்டி முழுமையாக இன்று நடைபெறும்.