மின் கட்டண அதிகரிப்பு தேவையற்றது – ஆளும் கட்சி MP

இலங்கை மின்சார சபை ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒரு பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக ஊடங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மின் கட்டண அதிகரிப்பு நியாயமற்றது என பொதுஜன பெரமுன பாரளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேயவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக சந்திப்பில் இந்த விடயங்களை அவர் கூறியுள்ளார்.

“மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் அது மக்களுக்கு மேலும் சுமையாகிவிடும்.

மின் கட்டணம் அண்மையில் அதிகரிக்கப்பட்டது. எண்ணெய், பொருட்களின் விலைகள் அதிகரிப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் மேலும் அதிகரிக்கப்பட்டால் மக்கள் மேலும் கஷ்டத்துக்கு உள்ளாவார்கள். இது மின் கட்டண உயர்வுக்குரிய நேரமல்ல” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்களுக்கான மின் தடை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென அரசாங்கத்திடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை முன் வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply