தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி அமைப்பாளராக ஊடகவியலாளர் லங்கேஷ் நியமனம்.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி தேசிய அமைப்பாளராக (Deputy National Organizer)இன்று முன்னாள் அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான கந்தையா லங்கேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் இந்த நியமனத்தை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

“பலர் தன்னை புறந்தள்ள நினைத்த போதும் தன்னால் முடியும் என பதவி தந்த பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் திகாம்பரம் அண்ணாவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் அண்ணாவுக்கும் என் சிரம் தாழ்த்திய நன்றிகள் உங்கள் அனைவரின் ஆதரவுடன் என் பயணம் தொடரும்” என லங்கேஷ் இந்த நியமனத்தின் பின்னர் உரையாற்றும் போது தெரிவித்தார்.

Social Share

Leave a Reply