அரை இறுதியில் பிரான்ஸ்

கட்டாரில் நடைபெற்ற உலக கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணி 2-1 என வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

விறு விறுப்பாக எதிர்பார்க்கப்பட்ட போட்டி, அதே போன்று இறுதி வரை சென்றது.

போட்டி ஆரம்பித்து 17 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி சார்பாக ஒரேலியன் சோமேனி முதல் கோலை அடித்த்தார். 54 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்தை பனால்டியினை கோலாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் மாற்றினார்.

78 ஆவது நிமிடத்தில் ஒலிவியர் ஜிரோட் பிரான்ஸ் அணி சார்பாக இரண்டாவது கோலை அடித்து முன்னிலை பெற்றுக்கொடுத்தார். 84 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பனால்டியினை இங்கிலாந்து அணியின் தலைவர் உயரமாக அடித்து தவறவிட்டார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி வாய்ப்பை தவறவிட்டது.

இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி ஏழாவது தடவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியுடன் அரை இறுதிப் போட்டியில் 14 ஆம் திகதி நள்ளிரவு தாண்டி 12.30 இற்கு மோதவுள்ளது.

இங்கிலாந்து அணி கடந்த முறை உலக கிண்ண தொடரில் அரை இறுதிப் போட்டிகுத் தெரிவாகியுள்ள நிலையில் இம்முறை காலிறுதிப் போட்டியோடு வெளியேறியுள்ளது.

Social Share

Leave a Reply