லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஜப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் யாழ் அணி பந்துவீச்சில் இறுக்கமாக வீசி, துடுப்பாட்டத்தில் அதிரடி நிகழ்த்தி 08 விக்கெட்களினள் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் முதல் சுற்றுப் போட்டிகளை நிறைவு செய்துள்ளன. யாழ் அணி
வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. கொழும்பு அணி 3 வெற்றிகளை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
கொழும்பு R.பிரேமதா ச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. துடுப்பாடிய கொழும்பு அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.
129 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய யாழ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடி நிகழ்த்தியதன் மூலம் இலகுவான வெற்றி கிடைத்தது. ரஹ்மனுள்ள குர்பாஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் இணைப்பாட்டமாக ஓட்டங்களை பகிர்ந்தனர்.
திசர பெரேரா, சொஹைப் மலிக் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு மூலம் கொழும்பு அணியின் முதல் நான்கு விக்கெட்கள் 16 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. சொஹைப் மலிக் 2 ஓவர்களில் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
நிஷான் மதுசங்க மற்றும் ரவி போபரா ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் கொழும்பு அணி ஓரளவு மீண்டு வந்தது. நிரோஷன் டிக்வெள்ல இந்த தொடரில் சிறந்த ஆரம்பத்தை எடுத்த போதும், கடைசி நான்கு போட்டிகளில் 2 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளார். இவற்றில் மூன்று தடவைகள் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
கொழும்பு அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஓய்வு எடுத்துக்கொண்டார். அது கொழும்பு அணியின் துடுப்பாட்டத்துக்கு பின்னடைவை ஒன்றை ஏற்படுத்தியது.
யாழ் அணி சார்பாக இன்று விஜயகாந்த் விஜயஸ்காந்துக்கு ஓய்வு வழங்கப்பட்டு பிரவீன் ஜெயவிக்ரம சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரஹ்மனுள்ள குர்பாஸ் | L.B.W | ஜெப்ரி வண்டர்ஸி | 69 | 40 | 8 | 4 |
| அவிஷ்க பெர்னாண்டோ | 40 | 38 | 3 | 0 | ||
| சொஹைப் மலிக் | பிடி – கஸூன் ரஜித | டொமினிக் ட்ரேக்ஸ் | 04 | 07 | 0 | 0 |
| சதீர சமரவிக்ரம | 09 | 10 | 1 | 0 | ||
| உதிரிகள் | 09 | |||||
| ஓவர் 15.3 | விக்கெட் 02 | மொத்தம் | 129 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கஸூன் ரஜித | 02 | 00 | 18 | 00 |
| தனஞ்சய லக்ஷன் | 01 | 00 | 09 | 00 |
| டொமினிக் ட்ரேக்ஸ் | 2.5 | 00 | 30 | 01 |
| மொஹமட் நபி | 02 | 00 | 08 | 00 |
| ஜெப்ரி வண்டர்ஸி | 04 | 00 | 33 | 01 |
| பென்னி ஹோவல் | 02 | 00 | 16 | 00 |
| ரவி போபரா | 02 | 00 | 16 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| டினேஷ் சந்திமால் | Bowled | திசர பெரேரா | 00 | 04 | 0 | 0 |
| நிரோஷன் டிக்வெல்ல | Bowled | சொஹைப் மலிக் | 00 | 02 | 0 | 0 |
| சரித் அசலங்க | பிடி- அபிப் ஹொசைன் | திசர பெரேரா | 06 | 06 | 0 | 1 |
| நிஷான் மதுசங்க | பிடி- திசர பெரேரா | ஷமான் கான் | 35 | 44 | 0 | 1 |
| தனஞ்சய லக்ஷன் | பிடி- அபிப் ஹொசைன் | சொஹைப் மலிக் | 01 | 04 | 0 | 0 |
| ரவி போபரா | L.B.W | பிரவீன் ஜயவிக்ரம | 20 | 19 | 2 | 0 |
| மொஹமட் நபி | Run Out | 00 | 06 | 0 | 0 | |
| டொமினிக் ட்ரேக்ஸ் | பிடி- டுனித் வெல்லாளகே | சுமிந்த லக்ஷன் | 01 | 03 | 0 | 0 |
| பென்னி ஹோவல் | 11 | 09 | 1 | 0 | ||
| ஜெப்ரி வண்டர்ஸி | பிடி- சொஹைப் மலிக் | அசித்த பெர்னாண்டோ | 04 | 05 | 0 | 0 |
| கஸூன் ரஜித | 01 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 12 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 09 | மொத்தம் | 128 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| திசர பெரேரா | 03 | 00 | 14 | 02 |
| சொஹைப் மலிக் | 02 | 00 | 04 | 02 |
| ஷமான் கான் | 04 | 00 | 22 | 01 |
| அசித்த பெர்னாண்டோ | 04 | 00 | 31 | 00 |
| பிரவீன் ஜயவிக்ரம | 03 | 00 | 23 | 01 |
| சுமிந்த லக்ஷன் | 04 | 00 | 29 | 01 |
