யாழ் அணி அதிரடி வெற்றி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஜப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் யாழ் அணி பந்துவீச்சில் இறுக்கமாக வீசி, துடுப்பாட்டத்தில் அதிரடி நிகழ்த்தி 08 விக்கெட்களினள் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் முதல் சுற்றுப் போட்டிகளை நிறைவு செய்துள்ளன. யாழ் அணி
வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. கொழும்பு அணி 3 வெற்றிகளை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

கொழும்பு R.பிரேமதா ச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. துடுப்பாடிய கொழும்பு அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.

129 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய யாழ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடி நிகழ்த்தியதன் மூலம் இலகுவான வெற்றி கிடைத்தது. ரஹ்மனுள்ள குர்பாஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் இணைப்பாட்டமாக ஓட்டங்களை பகிர்ந்தனர்.

திசர பெரேரா, சொஹைப் மலிக் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு மூலம் கொழும்பு அணியின் முதல் நான்கு விக்கெட்கள் 16 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. சொஹைப் மலிக் 2 ஓவர்களில் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

நிஷான் மதுசங்க மற்றும் ரவி போபரா ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் கொழும்பு அணி ஓரளவு மீண்டு வந்தது. நிரோஷன் டிக்வெள்ல இந்த தொடரில் சிறந்த ஆரம்பத்தை எடுத்த போதும், கடைசி நான்கு போட்டிகளில் 2 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளார். இவற்றில் மூன்று தடவைகள் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

கொழும்பு அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஓய்வு எடுத்துக்கொண்டார். அது கொழும்பு அணியின் துடுப்பாட்டத்துக்கு பின்னடைவை ஒன்றை ஏற்படுத்தியது.

யாழ் அணி சார்பாக இன்று விஜயகாந்த் விஜயஸ்காந்துக்கு ஓய்வு வழங்கப்பட்டு பிரவீன் ஜெயவிக்ரம சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுள்ள குர்பாஸ்L.B.Wஜெப்ரி வண்டர்ஸி694084
அவிஷ்க பெர்னாண்டோ  403830
சொஹைப் மலிக்பிடி – கஸூன் ரஜிதடொமினிக் ட்ரேக்ஸ்040700
சதீர சமரவிக்ரம  091010
       
       
       
       
       
       
       
உதிரிகள்  09   
ஓவர்  15.3விக்கெட்  02மொத்தம்129   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கஸூன் ரஜித02001800
தனஞ்சய லக்ஷன்01000900
டொமினிக் ட்ரேக்ஸ்2.5003001
மொஹமட் நபி02000800
ஜெப்ரி வண்டர்ஸி04003301
பென்னி ஹோவல்02001600
ரவி போபரா02001600
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டினேஷ் சந்திமால்Bowledதிசர பெரேரா000400
நிரோஷன் டிக்வெல்லBowledசொஹைப் மலிக்000200
சரித் அசலங்கபிடி- அபிப் ஹொசைன்திசர பெரேரா060601
நிஷான் மதுசங்க    பிடி- திசர பெரேராஷமான் கான்354401
தனஞ்சய லக்ஷன்பிடி- அபிப் ஹொசைன்சொஹைப் மலிக்010400
ரவி போபராL.B.Wபிரவீன் ஜயவிக்ரம201920
மொஹமட் நபிRun Out 000600
டொமினிக் ட்ரேக்ஸ்பிடி- டுனித் வெல்லாளகேசுமிந்த லக்ஷன் 010300
பென்னி ஹோவல்  110910
ஜெப்ரி வண்டர்ஸிபிடி- சொஹைப் மலிக்அசித்த பெர்னாண்டோ 040500
கஸூன் ரஜித  010100
உதிரிகள்  12   
ஓவர்  20விக்கெட்  09மொத்தம்128   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
திசர பெரேரா03001402
சொஹைப் மலிக்02000402
ஷமான் கான்04002201
அசித்த பெர்னாண்டோ 04003100
பிரவீன் ஜயவிக்ரம03002301
சுமிந்த லக்ஷன் 04002901

யாழ் அணி அதிரடி வெற்றி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version