தென் கொரியா ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சியான, லிபரல் கட்சியைச் சேர்ந்த, லீ ஜே மியூங்க், 61, வெற்றி பெற்றுள்ளார்.
தென் கொரியாவில் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், பதவி இருந்து அவர் நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் பதற்ற நிலையின் பின்னர் லீ ஜே மியூங்க் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட, பழமைவாத கட்சியான மக்கள் சக்தி கட்சியின் கிம் மூன் சூ, தோல்வி அடைந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.