ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட புதிய விமானம் பிரான்ஸ் பாரிஸ் நகரிலிருந்து இன்று (04.06) காலை இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளது.
இந்த விமானம் கொழும்பு பகுதியில் வானத்தில் தாழ்வாக பறந்தது. இதனால் இலங்கை விமானப் போக்குவரத்து ஆர்வலர்கள் முதல் முறையாக அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
சுமார் 1,500 அடி உயரத்தில், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவா வரை கொழும்பு கடற்கரையோரத்தில் விமானம் பறப்பதைக் காண காலி முகத்திடலில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.