தம்புள்ள, காலி அணிகளுக்கிடையில் கொழும்பு R.பிரேமதச மைதானத்தில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் போட்டியில் தம்புள்ள அணி சிறப்பாக பந்துவீசி காலி அணியினை வெற்றி பெறும் நிலைக்குள் கட்டுப்படுத்தியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய காலி அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆரம்பம் முதலே தடுமாறிய காலி அணி தொடர்ச்சியான இடைவேளைகளில் விக்கெட்களை இழந்ததன் காரணமாக அதிகளவில் ஓட்டங்களை பெற முடியவில்லை. நுவனிது பெர்னாண்டோவின் துடுப்பாட்டம் ஓரளவு கை கொடுக்க 100 ஓட்டங்களை தாண்டியது காலி.
தம்புள்ள அணி சார்பாக மத்தியூ போர்ட் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை தகர்த்தார். தம்புள்ள சார்பாக அனைவருமே சிறப்பாக பந்துவீசினார்கள். நூர் அஹமட் ஓட்டங்களை வழங்கமால் மிகவும் இறுக்கமாக பந்துவீசினார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| தனுக்க டபாரே | பிடி – லஹிரு மதுசங்க | மத்திய போர்ட் | 07 | 12 | 1 | 0 |
| குசல் மென்டிஸ் | பிடி – சிகான்டர் ரஷா | மத்திய போர்ட் | 17 | 15 | 2 | 0 |
| ஓஷத பெர்னாண்டோ | L.B.W | மத்திய போர்ட் | 00 | 01 | 0 | 0 |
| ஆஷாட் ஷபிக் | பிடி – மத்திய போர்ட் | லஹிரு மதுசங்க | 06 | 08 | 1 | 0 |
| அஸாம் கான் | Bowled | டிலும் சுதீர | 15 | 21 | 0 | 1 |
| நுவனிது பெர்னாண்டோ | 63 | 42 | 3 | 5 | ||
| இமாட் வசீம் | பிடி – சிகான்டர் ரஷா | நூர் அஹமட் | 03 | 07 | 0 | 0 |
| நிமேஷ் விமுக்தி | L.B.W | சிகான்டர் ரஷா | 05 | 05 | 0 | 0 |
| வஹாப் ரியாஸ் | பிடி – டிலும் சுதீர | மத்திய போர்ட் | 03 | 04 | 0 | 0 |
| நிபுன் மாலிங்க | 03 | 06 | 0 | 0 | ||
| உதிரிகள் | 07 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 08 | மொத்தம் | 129 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ப்ரமோட் மதுஷான் | 02 | 00 | 11 | 00 |
| லஹிரு மதுசங்க | 03 | 00 | 16 | 01 |
| சமிந்து விக்ரமசிங்க | 02 | 00 | 22 | 00 |
| மத்திய போர்ட் | 04 | 00 | 11 | 04 |
| நூர் அஹமட் | 04 | 00 | 06 | 01 |
| சச்சிதா ஜயதிலக | 01 | 00 | 03 | 00 |
| டிலும் சுதீர | 02 | 00 | 14 | 01 |
| சிகான்டர் ரஷா | 02 | 00 | 31 | 01 |
