தம்புள்ள அணி அபார பந்துவீச்சு

தம்புள்ள, காலி அணிகளுக்கிடையில் கொழும்பு R.பிரேமதச மைதானத்தில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் போட்டியில் தம்புள்ள அணி சிறப்பாக பந்துவீசி காலி அணியினை வெற்றி பெறும் நிலைக்குள் கட்டுப்படுத்தியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய காலி அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆரம்பம் முதலே தடுமாறிய காலி அணி தொடர்ச்சியான இடைவேளைகளில் விக்கெட்களை இழந்ததன் காரணமாக அதிகளவில் ஓட்டங்களை பெற முடியவில்லை. நுவனிது பெர்னாண்டோவின் துடுப்பாட்டம் ஓரளவு கை கொடுக்க 100 ஓட்டங்களை தாண்டியது காலி.

தம்புள்ள அணி சார்பாக மத்தியூ போர்ட் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை தகர்த்தார். தம்புள்ள சார்பாக அனைவருமே சிறப்பாக பந்துவீசினார்கள். நூர் அஹமட் ஓட்டங்களை வழங்கமால் மிகவும் இறுக்கமாக பந்துவீசினார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
தனுக்க டபாரேபிடி – லஹிரு மதுசங்கமத்திய போர்ட்071210
குசல் மென்டிஸ்பிடி – சிகான்டர் ரஷாமத்திய போர்ட்171520
ஓஷத பெர்னாண்டோ L.B.Wமத்திய போர்ட்000100
ஆஷாட் ஷபிக்பிடி – மத்திய போர்ட்லஹிரு மதுசங்க060810
அஸாம் கான்Bowledடிலும் சுதீர 152101
நுவனிது பெர்னாண்டோ  634235
இமாட் வசீம்பிடி – சிகான்டர் ரஷாநூர் அஹமட்030700
நிமேஷ் விமுக்தி L.B.Wசிகான்டர் ரஷா050500
வஹாப் ரியாஸ்பிடி – டிலும் சுதீர மத்திய போர்ட்030400
நிபுன் மாலிங்க  030600
       
உதிரிகள்  07   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்129   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ப்ரமோட் மதுஷான்02001100
லஹிரு மதுசங்க03001601
சமிந்து விக்ரமசிங்க02002200
மத்திய போர்ட்04001104
நூர் அஹமட்04000601
சச்சிதா ஜயதிலக01000300
டிலும் சுதீர 02001401
சிகான்டர் ரஷா02003101
தம்புள்ள அணி அபார பந்துவீச்சு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version