அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், சில கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், தற்போது அதனை சீர்செய்யும் பணிகள் மற்றும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.