பண்டிகை காலத்தில் விசேட ரயில் சேவைகள்!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு புகையிரத பயணங்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழமையான நெடுந்தூர ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக 8 விசேட ரயில்கள் சேவையில் சேர்க்கப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் அந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply